swaptrust2001@gmail.com
Mon – Sat 10:00am to 5:00pm
Goundampalayam, Coimbatore – 641030
Our Success Stories

Mugesh, an orphan who has been under the care of Torbay House since childhood, has made remarkable progress in both his education and career. After completing his schooling, he was admitted to the Tirunelveli Government ITI, where he pursued his technical studies with commitment and dedication.

Although considered an average student initially, with consistent encouragement and support, Mugesh worked hard and secured 489 out of 600 marks, a commendable achievement reflecting his perseverance.

As part of his ITI curriculum, he was selected for a two-month training program at Larsen & Toubro (L&T) Limited in Bangalore. The company provided him with a monthly stipend of ₹15,000, along with comprehensive support covering food, accommodation, and training expenses amounting to approximately ₹40,000 per trainee.

During this period, Mugesh had the advantage of being accompanied by his seniors, which further motivated him to participate in the training with confidence. Upon completion of the program, he has been assured of placement in one of L&T’s branches with a competitive salary package. Additionally, there are prospects for him to be considered for overseas assignments in the future.

Mugesh’s journey is a strong example of how sustained support and guidance at Torbay House can transform the lives of underprivileged children, enabling them to achieve self-reliance and build successful careers.

எனது பெயர் வேலுத்தாய். எனது வயது 55. உடல்நிலை பாதிப்பின் காரணமாக என் கணவருக்கு எந்த வேலையும் செய்ய இயலாததால், என்னுடைய கணவரையும் கவனித்து, குடும்பத்தையும் பராமரிக்கும் சூழ்நிலையில் இருந்தேன். இத்தகைய சூழ்நிலையில் சுவாப் அறக்கட்டளை மூலமாக எனக்கு மூன்று ஆடுகள் கிடைத்தது. அதனை பயன்படுத்தி, இப்பொழுது பன்னிரண்டு ஆடுகளாக பெருக்கி உள்ளேன். அதன் மூலம் என்னுடைய குடும்பத்தின் பொருளாதாரத்தை மேம்படுத்தி, என்னுடைய அடிப்படை தேவைகள் முழுவதையும் அதன் மூலம் நிறைவேற்றி வருகிறேன். அதற்காக சுவாப் அறக்கட்டளைக்கு நன்றி கூறுகிறேன்.

பசுபதி, வயது 53, பெரும்பத்தூர்.
நான் இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு காச நோயால் பாதிக்கப்பட்டு, இறக்கும் தருவாயில் இருந்தேன். நோயின் தீரும் குறையாததால் அடிக்கடி தீவிர கண்காணிப்பு பிரிவில் இருக்கும் நிலை ஏற்பட்டது. அத்தகைய சூழ்நிலையில் சுவாப் அறக்கட்டளை வழங்கிய சத்தான உணவு பொருட்களை தயாரித்து உண்ண ஆரம்பித்தவுடன் நோயின் தீவிரம் குறைந்தது. பின் அரசு மருத்துவமனையில் கொடுக்கப்பட்ட மருந்துகளும் வேலை செய்ய ஆரம்பித்தது. இப்பொழுது எந்த தொந்தரவும் இல்லாமல் உயிர் வாழ்வதற்கு கொடுக்கப்பட்ட மருந்துகள் மட்டுமல்ல கொடுக்கப்பட்ட சத்தான உணவும் ஒரு காரணமாக அமைந்துள்ளது.

என் பெயர் மஞ்சுளா தேவி. எனது ஊர் குவளைக்கண்ணி. நான் தையல் கற்றுக்கொள்ள வேண்டும் என்று பல வருடமாக ஆர்வமாக இருந்தேன். ஆனால் எனது பொருளாதாரதுக்கு ஏற்ற ஒரு நல்ல தையல் பயிற்சி எனக்கு கிடைக்கவில்லை. அதன் பின்னர் சுவாப் அறக்கட்டளை மூலமாக இயங்கும் தொழிற்பயிற்சி கல்லூரியில் இலவசமாக கற்றுக் கொடுக்கிறார்கள் என்று அறிந்து, சேர்ந்து பயின்றேன். நன்றாக கற்றுக் கொடுத்தார்கள். ஆறு மாதம் கற்றுக்கொண்ட பிறகு இலவச சான்றிதழையும், இலவச தையல் இயந்திரத்தையும் வழங்கினார்கள். இப்பொழுது நான் எனது ஊரிலும் எனது ஊரைச் சுற்றியுள்ள மற்ற ஊர்களிலும் பெண்களுக்கு அனைத்து ஆடைகளையும் தைத்துக் கொடுத்து விடுகிறேன். இதன் மூலம் மாதத்திற்கு பத்தாயிரம் வரை சம்பாதிக்கிறேன். இது என்னுடைய குடும்பச் செலவிற்கு பெரும் துணையாக இருக்கிறது.

எனது பெயர் துரைச்சி. எனது மகள் பெயர் கவி யாசினி. எனது மகள் டியூஷன் சென்ற பிறகு நன்றாக படிக்கிறாள். எப்போதும் சுறுசுறுப்புடன் இருக்கிறாள். இந்த டியூஷன் சென்டரில் சாப்பாடு கொடுக்கிறார்கள். டியூசனில் வீட்டு பாடங்கள் முழுவதையும் படித்து முடித்து விடுவதால் பள்ளி செல்ல ஆர்வமாக இருக்கிறாள். பொது அறிவு படங்களிலும் மிகுந்த ஈடுபாட்டுடன் படிக்கிறார். இந்த மகளுக்கு நடனம் ஆடுவது மிகவும் பிடித்துள்ளது. நன்றாக படிப்பதில் ஆசிரியர் அவளை நன்கு கவனித்துக் கொள்கிறார்கள் என்று மகிழ்ச்சியுடன் கூறுகிறாள். இப்படி ஆளையும், அறிவையும் வளர்க்கும் சுவாப் அறக்கட்டளை மாலை நேர வகுப்பு மையத்திற்கு எனது மனமார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.

எனது பெயர் ஆவுடையம்மாள். எனது வயது 76. எனது முதுமையின் காரணமாக எனது மகள் என்னை சரியாக கவனிக்கவில்லை. இத்தகைய சூழ்நிலையில் சுவாப் அறக்கட்டளை ஒரு திட்டத்தின் மூலமாக எனக்கு மூன்று ஆடுகளை கொடுத்தார்கள். அந்த ஆடுகளை எனது வீட்டின் அருகில் உள்ள நிலங்களில் மேய்ச்சலுக்கு கொண்டு செல்வேன். இப்போது என்னுடைய பொருளாதாரத்தையும் நான் சீர்படுத்தி, என்னுடைய மகளின் குழந்தைகளுக்கும் , மகனின் குழந்தைகளுக்கும் உதவி செய்து வருகிறேன். என் மகனுக்கு பிறகு நன்றாக என்னை கவனித்துக் கொள்கிறாள்.

கௌரி, எட்டிசேரி, வயது 34.
நான் கடந்த ஆண்டு விக்டர் தொழில் பயிற்சி மையத்தில் தையல் பயிற்சி எடுத்தேன். நன்றாக புரியும்படி கற்றுக் கொடுத்தார்கள். இலவசமாக தையல் பயிற்சி கொடுத்து, இலவசமாக போக்குவரத்து வசதிகளையும் செய்து கொடுத்து, எனக்கு ஒரு விலையில்லா தையல் இயந்திரத்தையும் கொடுத்தார்கள். நான் அதனைப் பயன்படுத்தி இப்பொழுது எனது ஊரில் உள்ள அனைவருக்கும் எல்லா விதமான உடைகளையும் நான் தைத்துக் கொடுக்கிறேன். அதன் மூலம் கிடைக்கும் வருவாயை என்னுடைய குடும்பத்தின் செலவினங்களுக்காக பயன்படுத்துகிறேன். என் கணவரின் சுமையை குறைப்பதாக என் கணவர் பாராட்டுகிறார்.

குருலட்சுமி 2016 ஆம் ஆண்டு முதல் 2019 ஆம் ஆண்டு வரை புன்னைவனப்பேரியில் உள்ள டியூஷன் சென்டரில் கல்வி பயின்றவர். இவர் தற்போது தங்கப்பழம் சட்டக் கல்லூரியில் மூன்றாம் ஆண்டு B.L சட்டம் பயின்று வருகிறார்

வேல் ராஜன், வயது 54, அழகு நாச்சியார் புரம்.
மூன்று ஆண்டுகளுக்கு முன்பு காச நோயால் பாதிக்கப்பட்டு அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தேன். சரியான உணவு எடுக்க இயலாத காரணத்தினால் நோயின் தீவிரம் அதிகரித்தது. இத்தகைய சூழ்நிலையில் சுவாப் அறக்கட்டளை மூலமாக அதிக சத்துடைய உணவுப் பொருட்களை கொடுத்ததால் நான் உட்கொண்ட மருந்து, மாத்திரைகளுக்கு என் உடல் ஈடு கொடுக்க முடிந்தது. அது மட்டுமல்ல ஆறு மாதத்திலேயே நான் குணம் பெற்று மீண்டும் என்னுடைய வேலைகளை செய்வதற்கு பாப் அறக்கட்டளை கொடுத்த உணவுப் பொருட்கள் காரணியாக அமைந்தது. இப்பொழுது காசோலையில் இருந்து முற்றிலும் விடுதலை பெற்று இயல்பான வாழ்க்கையை நான் வாழ்ந்து கொண்டிருக்கிறேன்.

A. செல்வி கண்டியப்பேரி டியூசன் சென்டரில் 2015 முதல் 2018 வரை பயின்று வந்தார். இப்பொழுது பி.எஸ்.சி நர்சிங் முடித்துவிட்டு சென்னையில் உள்ள ஒரு மருத்துவமனையில் பணியாற்றுகிறார்.

குருலட்சுமி 2016 ஆம் ஆண்டு முதல் 2019 ஆம் ஆண்டு வரை புன்னைவனப்பேரியில் உள்ள டியூஷன் சென்டரில் கல்வி பயின்றவர். இவர் தற்போது தங்கப்பழம் சட்டக் கல்லூரியில் மூன்றாம் ஆண்டு B.L சட்டம் பயின்று வருகிறார்.